சசிபெருமாள் குடும்பத்தினர் கைது அடக்குமுறை நடவடிக்கை: வைகோ

சசிபெருமாள் குடும்பத்தினர் கைது அடக்குமுறை நடவடிக்கை: வைகோ
Updated on
1 min read

சட்டமன்றக் கூட்டத் தொடரில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட சசிபெருமாள் குடும்பத்தினர் கைதுஅடக்குமுறை நடவடிக்கையாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு அமுல் படுத்தக் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடையில் ஜூலை 31 ஆம் தேதி அறப்போர் நடத்தியபோது மறைந்தார்.

இந்நிலையில், நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரி சசிபெருமாள் குடும்பத்தினர் அவர்களின் கிராமத்துக்கு அருகே சித்தர்கோயிலில் காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, சசிபெருமாளின் அண்ணன் வெங்கடாசலம், அவரது தம்பி செல்வம், சசிபெருமாளின் புதல்வர்கள் விவேக், நவநீதன், செல்வத்தின் மகன் ராஜா ஆகிய ஐந்து பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செயல் அடக்குமுறை நடவடிக்கையாகும்.

ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகும். காவல்துறையின் அராஜகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in