

சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக்கழகம் அருகேயுள்ள மாரி யப்ப நகரில் கடந்த 3-ம் தேதி காலை நடந்த குண்டுவெடிப்பின் பின்னணி குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவராத நிலை யில் தற்போது அதுபற்றிய அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் பல உலா வரு கின்றன. அதுகுறித்து ‘தி இந்து’ சிறப்புப் புலனாய்வு நடத்தியதன் மூலம் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
சிதம்பரம் மாரியப்ப நகர் 4-வது குறுக்குத் தெருவில் பன்னீர் செல்வம் என்பவரது வீட்டில் பல் கலைக்கழக ஊழியர் அருள் வாட கைக்கு இருக்கிறார். அந்த வீட்டில் மே 3-ம் தேதி பயங்கர சத்தம் கேட்டது. அக்கம்பக்கத் தில் இருந்தவர்கள் பார்த்தபோது, குண்டு வெடித்து படுகாயங்களுடன் கிடந்தார் திண்டுக்கல்லை சேர்ந்த ரவுடி மோகன்ராம். கண் கள் மற்றும் முகம் முழுவதும் குண்டு சிதறல்களால் துளைக்கப் பட்டிருந்தது. அவரை போலீஸார் புதுச்சேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யார் இவர்?
திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநரின் மகன் மோகன்ராம். இவரும் பிரபல ரவுடியான திண்டுக்கல் பாண்டியின் தம்பி நாகராஜனும் நண்பர்கள். இருவரும் நடந்து சென்று கொண் டிருந்தபோது திடீரென சுற்றி வளைத்த பாண்டியின் எதிரியான கரடிமணியின் ஆட்கள் நாக ராஜனை மட்டும் கொலை செய்து விட்டு தப்பினர். இந்த சம்பவம் தான் மோகன்ராமையும் ரவுடியாக மாற்றியது என்கின்றனர் போலீஸார்.
திண்டுக்கல் பாண்டி யோடு சேர்ந்து அரிவாளை தூக் கிய மோகன்ராம், அடுத்தடுத்து கொலை வழக்குகளில் சிக்கினார். ஒரு கட்டத்தில் திண்டுக்கல் பாண்டி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய் யப்படவும், அந்த கும்பலின் தலை வன் ஆனார் மோகன்ராம்.
பணத்துக்காக பல கொலை அசைன்மெண்ட்களைகையில் எடுத்தார். அதன் பின், 2011-ல் ஒருமுறை போலீஸில் சிக்கி மீண்டவர், சிதம்பரத்தில் வெடி குண்டு தயாரிக்கும் போதுதான் மறு படி போலீஸ் பிடிக்குள் சிக்கினார்.
சிதம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் ஆதரவில்தான் இங்கே தங்கியிருந்தார் என்று கூறும் போலீஸார், அண்ணா மலைப் பல்கலைக்கழக ஊழியர் ஒருவரைக் கொல்லும் திட்டத்தோடு தான் வெடிகுண்டு தயாரிக்க முற்பட்டார் என்கின்றனர். ஆனால், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த சிலரோ முற்றிலும் வேறு காரணம் கூறுகின்றனர்.
‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் சாராய வியாபாரி ராமு படுகொலை செய்யப்பட்டார். ராமுவின் பல கோடி ரூபாய் சொத் துக்களை அதிகாரபூர்வமாக அடை வதற்காக, அவருக்கு மிக நெருங் கிய ஒருவரே கூலிப்படை வைத்து ராமுவை கொலை செய்தார் என்பது குற்றச்சாட்டு. அந்தக் கொலையில் மோகன்ராமின் பங்கு இருப்ப தாக கூறப்படுகிறது. இந்த கொலையை கண்ணால் பார்த்த ஒரு சாட்சியையும் ராமுவின் சொத் துக்களுக்கு உரிமை கொண் டாடும் உறவுப் பெண்மணி ஒருவரை யும் அடுத்த கட்டமாக கொலை செய்வதற்கான வேலையை மோகன்ராமிடம் வழங்கப் பட்டதாம். அதற்காக சிதம்பரத்தில் மறைவாகத் தங்கியிருந்து வெடிகுண்டு தயாரிக்கும் போதுதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது” என்கின்றனர் காரைகாலில் சிலர்.
இதுகுறித்து சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜாரா மனிடம் பேசியபோது, ‘’இது போன்ற தகவல்கள் எங்களுக்கும் வந்துகொண்டுதான் இருக் கிறது. அவற்றை அலட்சியப் படுத்தவும் இல்லை.
இன்னும் உறுதிப் படுத்தவும் இல்லை. மோகன்ராமுடன் இருந்தவர் களில் இருவரை கைது செய்திருக்கி றோம். மோகன்ராமிடம் விசாரிக்கும் போதுதான் முழு உண்மைகள் வெளிவரும்” என்றார்.