

முதல்வரின் சாதனைத் திட்டங்களை திசை திருப்ப ஸ்டாலின் சூழ்ச்சி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்
முதல்வர் ஆணைக்கிணங்க மதுரையில் கழக அம்மா பேரவை சார்பிலும், அம்மா சேரிடபில் டிரஸ்ட் சார்பிலும் கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதனை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார் இதில் அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி மற்றும் பேராசிரியர் செனட்சங்கர் ஆகியோர் இருந்தனர்
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
இந்தியாவில் 29 மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் நமது முதல்வர் சிறப்பாக செய்து செய்து வருகிறார் பாரதப் பிரதமர் முதல் உலக சுகாதார அமைப்பு வரை முதல்வரின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பாராட்டி வருகின்றனர்
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 670பேர் குணமடைந்துள்ளனர் மதுரை மாவட்டத்தில் இதுவரை 5070 பேர் குணமடைந்துள்ளனர் இந்தியாவிலே தமிழகம் தான் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமென்று ஊடகங்கள் எல்லாம் பாராட்டி வருகின்றனர்
இதனை திசைதிருப்ப ஸ்டாலின் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறார் மின்கட்டணம் உயர்வு என்று ஒரு விஷம பிரச்சாரத்தை செய்து வருகிறார் இதற்கு சரியான பதிலடியை முதல்வரும், மின்சாரத்துறை அமைச்சரும் கூறி உள்ளனர்
இந்த கரோனா காலத்தில் மின் கட்டண உயர்வு எதுவும் கிடையாது உதாரணமாக தமிழகத்தில் 300 யூனிட்டுக்கு கட்டணம் 500 ரூபாய் தான் ஆனால் கேரளத்தை எடுத்து கொண்டால் 500 யூனிட்டுக்கு 1,165 ரூபாய், மகாராஷ்டிரத்தை எடுத்துக்கொண்டால் 500 யூனிட்டுக்கு 1,776 ரூபாய் வசூலிக்க படுகிறது
அதுமட்டுமல்லாது தமிழகத்தில் 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவமாக வழங்கப்படுகிறது இந்த 100 யூனிட் மின்சாரம் மூலம் ஆண்டுக்கு 2876 கோடி ரூபாய் இந்த நான்காண்டுகளில் மட்டும் 11,512 கோடி ரூபாயை தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது
ஆனால் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தினந்தோறும் 10 மணி நேரம் மின்வெட்டை ஏற்படுத்தி தமிழகத்தை இருட்டாக்கிய ஸ்டாலின் தற்போது மின் கட்டணம் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது என்று மக்களே இன்று பேசி வருகின்றனர்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்ற பழமொழிக்கேற்ப ஸ்டாலின் இந்த சூழ்ச்சி விளையாட்டுக்கு மக்கள் ஒருபோதும் பலியாக மாட்டார்கள் மக்களுக்காக தன்னையே அர்பணித்து வாழும் முதல்வர் பின்னால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் உள்ளனர் என்று அவர் கூறினார்