

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், திருச்சியில் 6 பேரும், அரியலூரில் 70, 75 வயது முதியவர்கள் 2 பேரும், கரூரில் 67 வயதான ஓய்வு பெற்ற சர்வேயரும் நேற்று உயிரிழந்தனர். மேலும், திருச்சி மாவட்டத்தில் 127 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 37 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 60 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி துணை மேலாளர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 40 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் 7 பேர் உட்பட 13 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் விசிக நிர்வாகிகள் 2 பேர் உட்பட 12 பேருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,028 ஆக உயர்ந்தது.
புதுச்சேரியில் நேற்று ஒரு அரசு மருத்துவர், 3 செவிலியர்கள் உட்பட 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுடன் கதிர்காமம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பு 30 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,179 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 97 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 47 பேரும், கடலூர் மாவட்டத்தில்58 பேரும் நேற்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.