ஸ்ரீ ரமணாஸ்ரமம் முன்னாள் தலைவர் வி.எஸ்.ரமணன் மறைவு

ஸ்ரீ ரமணாஸ்ரமம் முன்னாள் தலைவர் வி.எஸ்.ரமணன் மறைவு
Updated on
1 min read

திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ் ரமத்தின் முன்னாள் தலைவர் வி.எஸ்.ரமணன் இயற்கை எய்தினார்.

திருவண்ணாமலையில்உள்ள ஸ்ரீரமணாஸ்ரமத்தின் முன்னாள் தலைவராக இருந்த வி.எஸ்.ரமணன்(86), வயது முதிர்வின் காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கிரிவலப் பாதையில் உள்ள மயானத்தில் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

கடந்த 1994 முதல்..

வி.எஸ்.ரமணன், ஸ்ரீரமண மகரிஷியின் தம்பி நிரஞ்சானந்த சுவாமியின் பேரன். இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறு வனத்தின் பொது மேலாளராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 1994-ம் ஆண்டு முதல் கடந்த 17-ம் தேதி (ஜூலை) வரை ஸ்ரீரமணாஸ்ரமத்தின் தலைவராக இருந்தார்.

தற்போது, ஸ்ரீரமணாஸ்ரமத்தின் தலைவராக இவரது மகன் டாக்டர் வெங்கட் எஸ்.ரமணன் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in