கரோனா தொற்றால் 2 டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழப்பு; பணிப் பாதுகாப்பு கேட்டு முற்றுகைப் போராட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் பணிப் பாதுகாப்பு கேட்டு முற்றுகைப் போராட்டம்.
டாஸ்மாக் பணியாளர்கள் பணிப் பாதுகாப்பு கேட்டு முற்றுகைப் போராட்டம்.
Updated on
1 min read

கரோனா தொற்றால் 2 டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழந்ததால் பணிப் பாதுகாப்பு கேட்டு பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நேற்று (ஜூலை 21) வரை கரோனா தொற்றால் 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,551 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ராஜா நேற்று (ஜூலை 20) இரவும், செஞ்சி அருகே வடதரம் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் இன்று (ஜூலை 21) அதிகாலையும்சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதற்கிடையே இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 226 டாஸ்மாக் கடைகளை மூடிய அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர், விழுப்புரம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த மண்டல மேலாளர் முருகன், டாஸ்மாக் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், வாரிசு அடிப்படையில் பணி, கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு டாஸ்மாக் நிர்வாகம் மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in