அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இளம் அரசு மருத்துவர் தற்கொலை

கண்ணன்
கண்ணன்
Updated on
1 min read

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இளம் மருத்துவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அரசுஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைபட்ட மேற்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் கண்ணன் (25). நேற்று அதிகாலை மருத்துவமனை கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரோனா சிகிச்சை வார்டில் பணிபுரிந்து வந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டதால், பணிச்சுமை காரணமா அல்லதுஏதேனும் குடும்ப பிரச்சினையாக இருக்கலாமோ எனபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் தற்கொலை நிகழ்வு, டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவர் கண்ணன் மரணத்துக்குஉண்மையான காரணம் என்னவென்று தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உளரீதியான பாதிப்புகளுக்கு அதிக அளவில் உள்ளாகிறார்கள். அதற்கான காரணங்களை கண்டறிந்து போக்க வேண்டும்.அவர்களுக்கு 8 மணி நேரம்மட்டுமே வேலை என்பதை உறுதிசெய்ய வேண்டும். மனரீதியாகபாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in