கரோனாவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.3 லட்சம் நிதியுதவி

கரோனாவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.3 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

கரோனாவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊராக காவல் நிலைத்தில் கரோனா பாதித்து உயிரிழந்த தலைமைக் காவலர் அய்யனார் குடும்பத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊராகக் காவல் நிலைத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் அய்யனார் கரோனா பாதித்து உயிரிழந்தார்.

இதனைக் கேள்விப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அய்யனார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மேலும் தலைமைக் காவலர் அய்யனார் குடும்பத்திற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in