

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்குஅமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில் காந்திசாலை, தேரடி, காமராஜர் சாலை, மூங்கில் மண்டபம், ராஜாஜி சாலை, பேருந்துநிலையம், பூக்கடை சத்திரம் ஆகிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள்வெறிச்சோடி காணப்பட்டன.
எனினும், ஒரு சில பகுதிகளில் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்ததால் நகராட்சி அதிகாரிகள் அவற்றை அடைத்தனர். இதேபோல், விதிகளைமீறி செயல்பட்ட பெட்ரோல் பங்குகளையும் மூடினர்.