காவிரி ஆற்றில் குளிக்க இன்று தடை

காவிரி ஆற்றில் குளிக்க இன்று தடை
Updated on
1 min read

ஆடி அமாவாசை தினத்தில் காவிரி ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆடி அமாவாசை தினத்தன்று தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர், உறவினர்களுக்கு திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது வழக்கம்.

தற்போது கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆடி அமாவாசை நாளில் காவிரி ஆற்றுப் பகுதியில் மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பவானி கூடுதுறையில் தடை

பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் ஆடி அமாவாசைக்கு இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அடுத்து வரவுள்ள ஆடிப்பெருக்கின்போது (ஆடி 18-ம் தேதி) கூடுதுறையில் புனித நீராடிக் கொள்ளவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடவும் அனுமதி வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in