

கடந்த 3 மாதங்களாக பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பின் சூழலில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ ஆலோசனைகளை பவ்டா தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, முழு ஊரடங்கின்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ள கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றியாளர்களின் பட்டியல் கடந்த மே மாதம் 30-ம் தேதி வெளியிடப் பட்டது.
கரோனாவைப் பற்றி 4 தலைப்புகளில் நடத்திய போட்டியில் முதல் 5 பரிசு பெற்ற 40 பேரின் கவிதைகள், கட்டுரைகள் ‘கொல்லும் கரோனாவை வெல்லும் மனித இனம்’ என்ற தலைப்பில் கரோனா விழிப்புணர்வு புத்தகமாக வெளியிடப்பட்டது. பரிசு வழங்கல்- புத்தக வெளியீட்டு விழாவுக்கு பவ்டா நிறுவனரும் மேலாண் இயக்குநருமான டாக்டர் செ.ஜாஸ்லின் தம்பி தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி அல்பினா ஜாஸ், முதுநிலை பொது மேலாளர் வெங்கடாசலபதி, பொது மேலாளர்கள் எஸ்.கி.ஆர்.பாரி, சாந்தாராம், முதன்மை நிதி அதிகாரி கணேஷ், நிறுவன செயலாளர் தர், மக்கள் தொடர்பு அதிகாரி நாஞ்சில் கே.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தென்னிந்திய திருச்சபை விழுப்புரம் தூய ஜேம்ஸ் ஆலய போதகர் அருள் இம்மானுவேல் கோயில் பிள்ளை வாழ்த்துரை வழங்கினார். முதல் பரிசு பெற்ற பழனி தட்சணாமூர்த்தி, சௌந்தர்யா ஆகியோருக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி, ஜானி லீ ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.