Published : 20 Jul 2020 07:24 AM
Last Updated : 20 Jul 2020 07:24 AM

வேலைக்காக சென்றபோது சிறைபிடிக்கப்பட்டு 5 மாதங்களாக ஏமனில் தவிக்கும் கடலூர் இளைஞர் உட்பட 15 இந்தியர்- மீட்டு ஒப்படைக்க குடும்பத்தினர் வலியுறுத்தல்

கடந்த 5 மாதங்களாக ஏமன் நாட்டில் சிக்கி கடலூர் இளைஞர் உள்ளிட்ட 15 இந்தியர்கள் தவிக் கின்றனர். அவர்களை மீட்டு தங்க ளிடம் ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 15 பேர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வேலைக்காக, ஒரு நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து கடந்த பிப்ரவரி மாதம் எகிப்து செல்ல கப்பலில் பயணித்துள்ளனர்.

கப்பல் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கும் நிலையில் உள்ளதை அடுத்து இதுகுறித்து சவுதி அரேபியாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து அனுப்பப்பட்ட கப்பலில் அவர்கள் மீண்டும் சவுதிக்கு திரும்பிக் கொண்டிருந் தனர். அப்போது, வடக்கு ஏமனைச் சேர்ந்த கடல் பாதுகாப்புப் படை யினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து, அந்நாட்டின் சனா தீவில் சிறை வைத்துள்ளனர்.

தாங்கள் சிறை வைக்கப்பட்டி ருப்பது குறித்து, 15 பேரும் கடந்த பிப்.21-ம் தேதி வாட்ஸ் அப்பில் தங்கள் உறவினர்களுக்குத் தெரிவித்தனர். இந்த 15 பேரில் கடலூரை அடுத்த வைரன்குப் பத்தைச் சேர்ந்த தணிகாசலம் மகன் மோகன்ராஜ்(37) என்பவரும் ஒருவர். இரு தினங்களுக்கு ஒருமுறை தனது குடும்பத்தி னருடன் பேசும் மோகன்ராஜ், தன்னை மீட்க நடவடிக்கை எடுக் குமாறு குடும்பத்தினரிடம் கேட்டு வருகிறார்.

இந்த தகவலறிந்த மோகன்ரா ஜின் சகோதரர் சிவராஜ், முதலில் கப்பல் நிறுவன உரிமையாளரைத் தொடர்புகொண்டு விசாரித்த போது, விரைவில் அவர்களை மீட்டுவிடுவோம் என பதிலளித் துள்ளார். இந்திய தூதரகத்திலும் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். அவர்களும் மீட்பதாக கூறுகின் றனர். ஆனால், இதுவரை யாரும் மீட்கப்படவில்லை என்கிறார் சிவராஜ்.

கடலூர் வைரன்குப்பத்தில் உள்ள மோகன்ராஜின் மனைவி சுகன்யா கூறியதாவது:

குடும்ப சூழலால் என்னையும், 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு என் கணவர் வெளிநாடு சென் றார். என் கணவர் உட்பட 15 இந்தியர்கள், வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர், எகிப்தைச் சேர்ந்த ஒருவர் என 21 பேர் ஏமன் நாட்டு கடல் பாதுகாப்பு படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

கப்பல் நிறுவன உரிமையாளர் அகமது சுல்தானை தொடர்பு கொண்டபோது, விரைவில் மீட்கப்படுவார்கள் என்றார். ஆனால், 5 மாதங்கள் ஆகியும் மீட்கப்படவில்லை.

இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற் கொண்ட போதிலும் இதுவரை மீட்கப்படவில்லை என்றார்.

மேலும், “எந்த வருமானமும் இல்லாத நிலையில், தற்போது பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் என் தாய் வீட்டில் உள்ளேன். என் கணவரை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்” என்று கண்ணீர் மல்க சுகன்யா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x