

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள், ஊழியர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ரயில்வேயில் மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதுவரையில் சுமார் 20 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையே, கரோனா பாதிப்பால் இறந்த ரயில்வே ஊழியர் களின் செட்டில்மென்ட், வாரிசு வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை கோட்டத்தில் 8 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.