

‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் யோசனையை ஏற்று, மகாமகம் பெருவிழாவுக்கு லட்சக்கணக்கில் குவியும் மனிதர்களால் சுற்றுச்சூழல் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இழுக்கு ஏற்படும் நிகழ்வுகளைத் தவிர்க்கும் பணிகளில் இறங்கியுள்ளது கும்பகோணம் நகராட்சி.
தென்னக கும்பமேளா என அழைக்கப்படும் கும்பகோணம் மகாமகம் பெருவிழா உலகப் புகழ்பெற்றது. கடந்த 2004-ல் நடந்த மகாமகம் பெருவிழாவில் 39 லட்சம் பேர் பங்கேற்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு (2016) பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கும் மகாமகம் பெரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறுகிறது.
மகாமகம் திருவிழாவை சிறப் பாக நடத்த, தமிழக அரசு சுமார் ரூ.150 கோடியை ஒதுக்கி, பல்வேறு அடிப்படை பணிகளை செய்து வருகிறது. எவ்வளவுதான் ஏற்பாடு கள் செய்தாலும், அனைவருக்கும் கழிப்பிடம், குளியல், உணவு, குடிநீர், தங்குமிடம், போக்குவரத்து வசதிகளை செய்வதிலும், மனிதர் கள் விட்டுச் செல்லும் கழிவுகளை அகற்றுவதிலும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட விளை வுகளும் தவிர்க்க இயலாதவையாக இருந்தன.
ஆனால், வரவிருக்கும் மகா மகத்தில் அந்தக் குறைகளைக் களைய, சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் அ.நாராயணன், தமிழக உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் கே.பனீந்தர் ரெட்டிக்கு அனுப்பிய 4 முக்கிய யோசனைகள் குறித்த கடிதம், நல்ல மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அ.நாராயணன் கூறியபோது, “நடைபெறவுள்ள மகாமகத்துக்கு 50 லட்சம் பேருக்கு மேல் வருவார்கள். 10 நாட்கள் நடக்கும் மகாமகம் விழாவின்போது குப்பைகளும், மனிதக் கழிவுகளும் மலையாகக் குவியும். துப்புரவுப் பணியாளர்கள்தான் இந்த அசுத் தங்களை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் ‘மனிதக் கழிவு களை மனிதர்கள் அகற்றுவது சட்டப்படி குற்றம்.’ இதை உணர்ந்து, வரும் மகாமகம் விழா வில் அதுபோன்ற குற்றங்கள் நடை பெறாமல் இருக்க கண்காணிப் பதற்காக குழு அமைக்க வேண்டும்.
நகரின் தூய்மையைக் காக்கவும், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் அதிகம் தண்ணீர் தேவைப்படாத, சூழலைப் பாதுகாக்கும் பயோ டாய்லெட் (உயிரிகளைக் கொண்டு மனிதக் கழிவு களை மக்கச் செய்யும்) அதிகம் அமைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக் கும்விதமாக சுத்தமான பசுமை யான (Clean and Green) மகாமகம் விழாவை நடத்த, தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் விற்பனை, பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்துத் தரப்பினரிடமும் இதுகுறித்த விழிப் புணர்வு ஏற்படுத்தும் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்ற 4 கோரிக்கைகளை முன்வைத்து அரசின் முதன்மைச் செயலருக்கு கடிதம் எழுதி னேன்.
எங்களின் யோசனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட தாகவும், மகாமகம் விழாவுக் காக 148 தற்காலிக பயோ டாய் லெட்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கும்பகோ ணம் நகராட்சி பதில் தெரிவித் துள்ளது. இந்தக் கருத்தை மக்க ளிடம் தீவிரமாகக் கொண்டுசென் றால்தான், எதிர்காலத்தில் பெரிய விழாக்கள் நடைபெறும்போது இதுபோன்ற தவறுகள் நடக்காது” என்றார் நாராயணன்.