இந்து மதத்தை இழிவுபடுத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சமக தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்

இந்து மதத்தை இழிவுபடுத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சமக தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்
Updated on
1 min read

இந்து மதத்தை இழிவு படுத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘உதவி செய்யாவிட்டாலும் பிறருக்கு இன்னல் தரவேண்டாம்’ என்பது பழமொழி. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கடைப்பி டிக்கும் கலாச்சாரம், தெய்வ வழிபாட்டை கொச்சைப்படுத்துபவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனை இனி ஆண்டாண்டு காலத்துக்கு, யாரும் வாய் திறவாமல் நம் இந்துக் கடவுள்களை விமர்சிக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும்.

எந்த மதத்தையும் இழிவுபடுத்தக் கூடாது என்ற எண்ணத்தோடு வாழ்ந்துவரும் நம்மிடையே, பிரிவினை என்ற விஷத்தை விதைப்பவர்கள் இவர்கள். ஒரு வாதத்துக்கு கேட்கிறேன், இவர்களால் மற்ற மதத்தை, அந்த மதபோதனைகளை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா?

இந்து மதத்தை இழிவுபடுத்தினால் யாரும் கேட்கமாட்டா ர்கள் என்று தொடர்ந்து விமர்சிக்கின்ற கூட்டத்தை, குண்டர் சட்டத்தில் கைது செய்து பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in