

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி கவசம் குறித்து ஒரு யூடியூப் சேனலில் வெளி யிடப்பட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது: கந்த சஷ்டிக் கவசம் தமிழ் மக்களின் இல்லங்களில் அன்றாடம் ஒலிக்கும் பக்திப் பாடலாகும். இப்பாடலில் உச்சிமுதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து கவசமாக காக்கப்பட வேண்டும் என முருகப் பெருமானிடம் மனமுருகி முருகனடியார்கள் பாடி இறையருள் பெறுகின்றனர்.
தவறான அர்த்தம் கற்பிப்பு
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவதூறாக விமர்சனம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.