தேனியில் குடிசை மாற்று வாரிய கூட்டம்: துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு

தேனியில் நடைபெற்ற குடிசை மாற்று வாரிய ஆய்வுக் கூட்டத்தில் பேசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
தேனியில் நடைபெற்ற குடிசை மாற்று வாரிய ஆய்வுக் கூட்டத்தில் பேசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
Updated on
1 min read

தேனியில் குடிசை மாற்று வாரிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: தேனி மாவட்டத்தின் நகர்ப்புற பகுதிகளில் நீர்நிலை புறம்போக்குகள், சாலை மற்றும் ரயில்வே புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் இவர்களை மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 925 குடிசை வீடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., குடிசை மாற்று வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சண்முகசுந்தரம், உதவிப் பொறியாளர் மணிபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in