தமிழகம் முழுவதும் 3-வது ஞாயிற்றுக்கிழமையாக இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்: கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் 3-வது ஞாயிற்றுக்கிழமையாக இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்: கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தல்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வில்லாமுழு ஊரடங்கு அமல்படுத்தப்படு கிறது.

சென்னையில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் கடுமையாக உயர்ந்து வருகிறது. பரவலைதடுப்பதற்காக தற்போது 6-ம் கட்டஊரடங்கு ஜூலை 31 வரைஅமலில் உள்ளது. இந்நிலையில் இம்மாதத்தில் 5, 12 , 19 மற்றும் 26தேதிகளில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், இம்மாதத்தின் 3-ம் ஞாயிற்றுக்கிழமையான இன்றுதளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, இன்று பால் விநியோகம், மருத்துவமனை, மருந்தகங்கள், மருத்துவவாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் இயக்கத்துக்கு மட்டும் அனுமதிஅளிக்கப்படும். மருத்துவ அவசரத்துக்கு மட்டும் பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்தலாம்.

இதுதவிர அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியசாலை சந்திப்புகள், எல்லைகளில்சோதனைச்சாவடி அமைத்து பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலர் ஆலோசனை

நேற்று முன்தினம் மாவட்டஆட்சியர்களுடன் காணொலி காட்சிமூலம் தலைமைச் செயலர் கே.சண்முகம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்துஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று முழு ஊரடங்கு காரணமாக நேற்றே காய்கறி, மளிகை, மீன், இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், மாநிலத்தின் பல நகரங்களிலும் சாலையில் போக்குவரத்து நெரிசல்காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in