ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவத்தில் காவலர் பணியிடை நீக்கம்

ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவத்தில் காவலர் பணியிடை நீக்கம்
Updated on
1 min read

ஆம்பூரில் போலீஸார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவத்தில் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆம்பூரில் கடந்த 12-ம் தேதி ஊரடங்கின்போது இருசக்கர வாகனத்தில் வந்த முகிலன் என்பவரின் இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த முகிலன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.அவர் வேலூரில் உள்ள தனியார்மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக, ஆம்பூர் நகர காவல் நிலைய போலீஸார் 5 பேர் ஏற்கெனவே திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அதே காவல் நிலையத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற காவலரை திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in