Last Updated : 17 Jul, 2020 08:45 PM

 

Published : 17 Jul 2020 08:45 PM
Last Updated : 17 Jul 2020 08:45 PM

முகக்கவசம் அணியாதவர்கள் மீது பேஸ்புக்கில் புகார் தெரிவிக்கலாம்: மதுரை நகர் காவல்துறை அறிவிப்பு

முகக்கவசம் அணியாதவர்கள் மீது பேஸ்புக்கில் புகார் தெரிவிக்கலாம் என மதுரை நகர் காவல்துறை அறிவித்துள்ளது.

கரோனாவைத் தடுக்கும் பொருட்டு மதுரை நகர் காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கின்றனர். அந்த வரிசையில் புதிய நடவடிக்கை ஒன்று தொடர்பாக காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா இன்று அறிவித்துள்ளார்.

பொது இடங்களில் ம்க்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் பேசும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

அத்தியாவசியத் தேவைகளுக்கென வெளியில் கடைகளில் வரிசையில் நிற்கும்போதும், பொது இடங்களில் யாரேனும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தால் உடனடியாக, அவர்கள் இருப்பிடத்துடன் கூடிய புகைப்படம் அல்லது வீடியோவை பதிவு செய்து, மதுரை மாநகர காவல் வாட்ஸ் –அப் குற்ற முறையீட்டு எண் (83000-21100) அல்லது மதுரை நகர் போலீஸ்புக் (Madurai City Police facebook) பக்கத்தில் தாராளமாகபதிவிடலாம்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x