

கடலூர் அருகே கோண்டூரில் உள்ள டிஎஸ்பி விஷ்ணுபிரியா வீட்டில் திமுக எம்பி கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் நேற்று வந்து விஷ்ணுபிரியா படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவுக்கு அஞ்சலி செலுத்த நேற்று கடலூர் வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு வழக்கில் குற்றம்சாட் டப்பட்ட, சந்தேகத்துக்கு இடமான நபர்கள் உயிரோடு இருக்கும் நிலையில் அந்த வழக்கை விசாரித்த அதிகாரி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் நேர்மை யான அதிகாரிகள் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. விஷ்ணுபிரியா விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் எஸ்பி செந்தில்குமார் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால், வழக்கை திசைதிருப்பும் நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
வழக்கை விசாரிக்கிறோம் என்ற போர்வையில் விஷ்ணுபிரியா மரணத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் மிக மோச மான நிலையில் நடத்தப்படுவதாக கருதுகிறேன். எனவே, உயரதி காரிகள் பெண் காவலர்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பது கண்காணிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற பெண் நீதிபதி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி அடங்கிய வழிகாட்டுதல் குழு ஏற்படுத்துவது அவசியம். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சககத்துக்கு கடிதம் எழுதுவேன். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
இதுபோல, விஷ்ணுபிரியா பெற் றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று கடலூருக்கு திமுக எம்பி கனிமொழி வந்திருந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “விஷ்ணுபிரியா மரணம் மூலம் பெண் காவலர் களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதை அறிய முடிகிறது. எனவே, உடனடியாக பெண் காவலர்களுக்கான பாதுகாப்பு குறித்து முதல்வர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் காவலர்களின் பிரச்சினை குறித்து கேட்டறிந்து தீர்வு காணும் விதமாக ஒரு அமைப்பு உருவாக் கப்பட வேண்டும் விஷ்ணுபிரியா வழக்கில் விசாரணையை நேர்மை யான முறையில் நடத்தி உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும்.
திமுக ஆட்சிக் காலத் தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் காவல்துறை செயல்பாடுகள் மோசமாகிவிட்டது” என்றார்.