Published : 17 Jul 2020 07:20 AM
Last Updated : 17 Jul 2020 07:20 AM

திருக்குறளை மேற்கோள் காட்டி ட்விட்டரில் பதிவிட்ட மோடிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் நன்றி

திருக்குறளை மேற்கொள் காட்டி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தெய்வப்புலவர் திருவள்ளு வரின் எழுத்துக்கள் நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந் தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளை படித்துப் பயனுறுவர் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

பிரதமரின் கருத்து குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகப் பொது மறையாம் திருக்குறள் நீதிநூல் மட்டு மின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ் கிறது. இனம், மொழி, நாடு போன்ற எல்லை களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வை நெறிப்படுத்தும் உயரிய நூலா கும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும். இத்தகைய சிறப்பு மிக்க திருக்குறளை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும்’’ என தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு நன்றி தெரிவித்து தமிழக துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

திருவள்ளுவ பெருமானின் பெருமையை புகழ்ந்துரைத்தும் வள்ளுவ நெறியில் இந்த வையகம் வாழ்வுபெற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருப்பதை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

ஒப்பில்லா கருத்துகளை மொழிந்த வள்ளுவரின் திருக்குறள் உலகப்பொது மறையாகும். அறநெறிகளின் அற்புதச் சாரம். தமிழ் மொழியின் பெருஞ்சிறப்பு. மக்கள் வாழ்வில் உயர்வு பெற ஒளி காட்டி வழிகாட்டும் உன்னத நூல். திருக்குறளின் இப்பெருமைகளை எல்லாம் பிரதமரின் வாய்மொழியாக கேட்கும்போது தமிழ் மக்களின் இதயங்கள் பூரிப்பில் பொங்கி வழிகின்றன.

இனம், மொழி, மத பேதங்கள் கடந்து உலக மாந்தர் அனைவருக்கும் பொருந் தும் வகையில் மானிட வாழ்வுக்கான அறம், பொருள், இன்பத்தை விளக்கிக் கூறும் திருக்குறளின் சிறப்பை மேற்கொள் காட்டிய பிரதமருக்கு எனது சார்பிலும், உலகத் தமிழர்கள் அனைவரது சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் பிரதமருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x