

சர்வதேச மருந்து தயாரிப்பு, ஆராய்ச்சி நிறுவனமான ‘அஸ்ட்ரா ஸெனெகா’வின் இந்தியப் பிரிவு அஸ்ட்ரா ஸெனெகா ஃபார்மா இந்தியா லிமிடெட். இந்நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டபாக்லிஃப்ளோசின் ஃபோர்க்சிகா (Dapagliflozin Forxiga) என்ற மருந்துக்கான ஒப்புதலை இந்நிறுவனம் மத்திய அரசிடம் சமீபத்தில் பெற்றுள்ளது. இதய செயலிழப்பு சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல்நீரிழிவு எதிர்ப்பு மருந்து இது. மேலும்,இதய செயலிழப்பால் ஏற்படும் பாதிப்பை 26%குறைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ரா ஸெனெகா ஃபார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ககன்தீப் சிங் கூறும்போது, ‘‘இந்தியாவில் விரைவான ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்கப்பட்டதன்மூலம், நோயாளிகளின் நோய்த் தன்மையை குறைத்து, அவர்களது ஆயுளை அதிகரிக்க முடியும்’’ என்றார்.
இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்று மருத்துவ விவகாரங்கள், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் பிரிவு துணைத் தலைவர் அனில் குக்ரேஜா தெரிவித்தார்.
‘‘இப்போது இந்தியாவில் இந்த மருந்து கிடைப்பதால், வயதான மூத்த, இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை வழங்க முடியும்” என்று அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதயநோய் மருத்துவர் டாக்டர் கிரிஷ் நவசுண்டி கூறினார். இதுகுறித்த மேலும் தகவல்களை இணையதளத்தில் (www.astrazeneca.com/india) அறியலாம். ட்விட்டரிலும் (@AstraZeneca) பின்தொடரலாம்.