

தமிழகத்தில் கடந்த 113 நாட்களில் ஊரடங்கை மீறி சாலையில்சுற்றித் திரிந்தவர்கள் மீது 7 லட்சத்து 83 ஆயிரத்து 614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 37 ஆயிரத்து 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 18 கோடியே 13 லட்சத்து89 ஆயிரத்து 771 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு கெடுபிடிகளை போலீஸார் குறைத்துள்ளனர். ஒரே மாவட்டத்துக்குள் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி, சோதனைகளையும் குறைத்து விட்டனர். இதனால் வியாபாரிகள் மற்றும்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.