

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது:
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ‘தி இந்து’ குழும பதிப்பக நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாலினிபார்த்தசாரதிக்கு எனது வாழ்த்துகள். கடந்த 35ஆண்டுகளுக்கும் மேலாக தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம் ‘தி இந்து’ குழுமத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அவருக்கு கிடைத்த பொருத்தமான அங்கீகாரம் இது.
செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ: ‘தி இந்து’ குழுமநாளிதழ்களின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் மாலினி பார்த்தசாரதிக்கு வாழ்த்துகள். அவரது சீரிய தலைமையில்,‘தி இந்து’ குழுமம் உயர் சிறப்பு களை பெற்று வளர்ச்சியில் சிகரம் தொடட்டும்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: ‘தி இந்து’ குழுமத்தின் முதல் பெண் தலைவராகும் மாலினி பார்த்தசாரதிக்கு வாழ்த்துகள். அவரது தலைமையின் கீழ் ‘தி இந்து’ நாளிதழ்மேலும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி: ‘தி இந்து’ குழும பதிப்பக நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எனது இனிய நண்பர் மாலினி பார்த்தசாரதிக்கு ‘தி இந்து’ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘தி இந்து’ குழுமத்தை அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்வார் என்று நம்பு கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறியுள் ளனர்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வி.மைத்ரேயன், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோரும் மாலினி பார்த்தசாரதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.