

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.84 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.61 சதவீதம் அதிகமாகும்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு எனப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் 8,310 மாணவர்கள், 10,499 மாணவியர் என மொத்தம் 18,809 பேர் இத்தேர்வை எழுதினர். இதில் 7,605 மாணவர்கள், 10,234 மாணவியர் என மொத்தம்17,839 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 94.84 சதவீத தேர்ச்சியாகும். கடந்த 2019-ம் ஆண்டில் 84.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 0.61 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு மாணவர்கள் 91.52 சதவீதமும், மாணவியர் 97.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 3,828 மாணவர்கள், 4,897 மாணவியர் என மொத்தம் 8,725 பேர் இத்தேர்வை எழுதினர். இதில் 3,493 மாணவர்கள், 4,778 மாணவியர் என மொத்தம் 8,271 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.79 சதவீத தேர்ச்சியாகும்.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 2,374 மாணவர்கள், 2,967 மாணவியர் என மொத்தம் 5,341 பேர் இத்தேர்வை எழுதினர். இதில் 2,136 மாணவர்கள், 2,874 மாணவியர் என மொத்தம் 5,010 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 93.80 சதவீத தேர்ச்சியாகும். திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 2,108 மாணவர்கள், 2,635 மாணவியர் என மொத்தம் 4,743 பேர் இத்தேர்வை எழுதினர். இதில் 1,976 மாணவர்கள், 2,582 மாணவியர் என மொத்தம் 4,558 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.09 சதவீத தேர்ச்சியாகும்.