Published : 16 Jul 2020 11:09 AM
Last Updated : 16 Jul 2020 11:09 AM

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தென் மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) காலை வெளியானது. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை விருதுநகர் மாவட்டம் 96.26% முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 2 தொடங்கி 24-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் கரோனா ஊரடங்கால் தாமதமாக வெளியாகியுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

மொத்தம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 931 பேர் தேர்வெழுதினர்.இதில், மொத்தம் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 89.41%. மாணவியர் எண்ணிக்கை 94.80%. மாணவர்களைவிட மாணவியர் 5.39% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் 97.12%-உடன் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை ஈரோடு மாவட்டமும் மூன்றாவது இடத்தை கோவை மாவட்டமும் பெற்றுள்ளன.

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை வழக்கம்போல் விருதுநகர் மாவட்டம் 96.62%-உடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு விருதுநகர்: 94.44 தேர்ச்சி விகிதம் பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் 90.63% உடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

விருதுநகர் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விருதுநகர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட து முதல் கடந்த 2013-ஆம் ஆண்டு வரை ப்ளஸ் டூ அரசு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பெற்று வந்தது. அதன்பின் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முதலிடத்தைப் பெற்ற விருதுநகர் மாவட்டம் கடந்த ஆண்டு மாநில அளவில் ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த ஆண்டு நான்காம் இடத்திற்கு சற்று முன்னேறி உள்ளது கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

13-வது இடத்தில் மதுரை- தேர்ச்சி விகிதம் உயர்ந்தும் பின்னுக்குச் சென்றது:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மதுரை மாவட்டம் 94.42 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 16,208 மாணவர்கள், 18, 452 மாணவிகள் என மொத்தம் 34,660 பேர் எழுதினர். இவர்களில் மாணவர்கள், 14,864 பேர், மாணவிகள் 17,862 பேர் என மொத்தம் 32,726 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.71 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.80ஆகவும் உள்ளது.

மாவட்டத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.42 சதவீதம். மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் மதுரை 13- ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 93.64% பெற்று 12-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 94.42% பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும் கூட மாநில அளவில் 13-வது இடத்தில் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 70 அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 86.94 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேனியில் தேர்ச்சி விகிதம் 90.63%:

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் என இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 138 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

6ஆயிரத்து 798மாணவர்கள், 7ஆயிரத்து 163மாணவியர் என மொத்தம் 13ஆயிரத்து 961பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 5ஆயிரத்து 889மாணவர்கள், 6ஆயிரத்து 764மாணவியர் என மொத்தம் 12ஆயிரத்து 655பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 86.65ஆகும். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90.63%.

முன்னேறிய சிவகங்கை:

பிளஸ் 2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 11-ல் இருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியது.

சிவகங்கை மாவட்டத்தில் 156 பள்ளிகளைச் சேர்ந்த 6,711 மாணவர்கள், 8,777 மாணவிகள் என 15,488 பேர் தேர்வு எழுதினர். இதில் 6,292 மாணவர்கள், 8,523 மாணவிகள் என 14,815 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர் தேர்ச்சி சதவீதம் 93.76, மாணவிகள் 97.11 சதவீதம், மொத்தம் 95.65 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.

கடந்த 2018-19-ம் கல்வியாண்டில் 93.81 சதவீதம் தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 11-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.84 சதவீதம் அதிகரித்து 7-வது இடத்திற்கு உயர்ந்தது. மாவட்டத்தில் 52 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தன. இதில் 10 அரசு பள்ளிகள், 7 உதவி பெறும் பள்ளிகள், 35 தனியார் பள்ளிகள் பெற்றுள்ளன, இத்தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார்.

புதிதாக உருவான தென்காசி மாவட்டத்தில் 94.18% தேர்சி:

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டில் 6,069 மாணவர்கள், 7,481 மாணவிகள் என மொத்தம் 13,550 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

இவர்களில் 5,540 மாணவர்கள், 7,222 மாணவிகள் என மொத்தம் 12,762 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 91.28 சதவீத மாணவர்களும், 96.54 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.18 சதவீதம் ஆகும்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 47 அரசு மேல்நிலைப்ப் பள்ளிகளில் 3 பள்ளிகளும், 13 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 பள்ளிகளும், 19 பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 பள்ளிகளும், 42 மெட்ரிக் பள்ளிகளில் 29 பள்ளிகளும், 3 சுயநிதி பள்ளிகளில் 2 பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தம் 124 மேல்நிலைப் பள்ளிகளில் 45 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

நெல்லையில் 95.01%:

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.01 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 15315 மாணவர்கள், 19731 மாணவிகள் என்று மொத்தம் 35046 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தனர். அதில் 14182 மாணவர்கள், 19114 மாணவிகள் என்று மொத்தம் 33296 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.01. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்- 92.60, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம்- 96.87.

தர வரிசையில் 3 இடம் பின்னுக்குச் சென்ற குமரி மாவட்டம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.06 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட மாநில தரவரிசையில் 3 இடங்கள் பின்தங்கி 9வது இடத்தை பிடித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, திருவட்டாறு, குழித்துறை ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் இருந்து மொத்தம் 21,989 மாண, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தனர்.

தேர்வு முடிவு வெளியான நிலையில் 9 ஆயிரத்து 225 மாணவர்களும், 11,659 மாணவிகளும் என மொத்தம் 20,884 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.06 சதவீதம் தேர்ச்சிஆகும்.

இவற்றில் மாணவியர் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 91.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேர்சி விகிதம் 94..61 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 95.06 சதவீதம் பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் தமிழக தேர்ச்சி விகித தரவரிசையில் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் நடப்பாண்டு 9வது இடத்திற்கு சென்று பின்தங்கியுள்ளது.

தென்மாவட்டங்கள் தேர்ச்சி விகிதம்:

வரிசை எண் மாவட்டம் தேர்ச்சி விகிதம்
1 விருதுநகர் 96.62%
2 சிவகங்கை 95.65%
3 கன்னியாகுமரி 95.06%
4 திருநெல்வேலி 95.01%
5 தூத்துக்குடி 94.84%
6 மதுரை 94.42%
7 திண்டுக்கல் 93.13%
8 ராமநாதபுரம் 93.12%
9 தேனி 90.63%
10 தென்காசி 94.18%

மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அவரவர் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டுள்ளது.

நிருபர்கள்- இ,மணிகண்டன், சுப.ஜனநாயகச் செல்வம், என்.கணேஷ்ராஜ், இ.ஜெகநாதன், த.அசோக்குமார், அ.அருள்தாசன், எல்.மோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x