Last Updated : 15 Jul, 2020 07:41 PM

 

Published : 15 Jul 2020 07:41 PM
Last Updated : 15 Jul 2020 07:41 PM

சிவகங்கை மாவட்டத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 101 பேருக்கு கரோனா 

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 101 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை 1, 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் 300 முதல் 600 ரத்த மற்றும் சளி மாதிரிகளை சுகாதாரத்துறையினர் எடுக்கின்றனர்.

தவிர சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் ரத்த மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.

இங்கு எடுக்கும் மாதிரிகளை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அங்கு ஒரே ஒரு இயந்திரம் மட்டுமே இருப்பதால் ஒரு நாளுக்கு 4 ஷிப்டுகள் மூலம் 160 முதல் 300 பரிசோதனை செய்யப்படுகின்றன. இதனால் பரிசோதனை முடிவுகள் 3 முதல் 5 நாட்களுக்கு பிறகே கிடைத்தன. முடிவுகள் வெளியாகும் வரை பரிசோதிக்கப்பட்டோர் வீடுகளிலேயே தனிப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் வெளியில சுற்றி திரிந்தனர். மேலும் இதில் பலர் கரோனா தொற்று உடையவர் என முடிவுகள் வெளியாகும்போது தெரியவந்தது. அதற்குள் அவர்கள் பலருக்கு பரப்பும் நிலை இருந்தது.. சிலசமயங்களில் கரோனா பாதிப்பு தெரிவதற்கு முன்பே சிலருக்கு உடலைநிலை மோசமடைவதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து ரத்த, சளி மாதிரிகள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியை தவிர்த்து கோவை தனியார் பரிசோதனை மையத்திற்கும் அனுப்பப்பட்டன.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் முதல் முறையாக 101 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை சிவகங்கை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர்.

மேலும் இன்று 31 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x