பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு 3 நாட்களில் நடவடிக்கை: நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி. உறுதி

பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு 3 நாட்களில் நடவடிக்கை: நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி. உறுதி
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஓம்பிரகாஷ் மீனா மாற்றப்பட்டு புதிய கண்காணிப்பாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டிருந்தார்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு 3 முதல் 5 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க தனி வாட்ஸ்அப் எண் விரைவில் அறிவிக்கப்படும்.

அந்த வாட்ஸ் அப்எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக அந்தந்த காவல்நிலையங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பொது ஊரடங்கு காலத்தில் மனுக்களுடன் நேரடியாக வர தேவையில்லை.

மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்படும். பொதுமக்கள் - காவல்துறை இடையே நல்லுறவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா காலமான தற்போது அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மணிவண்ணன் ஏற்கெனவே பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in