அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீடியோவில் பாடம்: ஒளிப்பதிவுப் பணிகள் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீடியோவில் பாடம்: ஒளிப்பதிவுப் பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீடியோ மூலம் பாடம் நடத்துவதற்கான பட ஒளிப்பதிவுப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் இன்று தொடங்கியது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவர்கள் நலன் கருதி நடப்பு கல்வியாண்டிற்கு 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரைக்கான பாடத்திற்குரிய விருப்பமுறைப் பாடங்கள் மற்றும் பயிற்சி வினாக்களை வீடியோவாக பதிவு செய்து மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

இதற்காக விருதுநகர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து 4 ம் வகுப்பு தமிழ் மற்றும் 7, 8 வகுப்புகளுக்கு குறிப்பிட்ட பாடங்களுக்கு சிறப்பு மற்றும் தனித்திறமைகள் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களை நடத்தி ஒளிப்பதிவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இப்பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் விடுகளுக்கே பாடங்களை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்கள் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சியில் இப்போது ஒளிபரப்பப்பட்டு வரும் பாடங்களைக் கவனத்துடன் கேட்டு, தங்களது நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in