என்.சங்கரய்யா பிறந்த நாள்: தியாகத் தழும்புகளையே பதக்கங்களாகக் கொண்டவர்; ஸ்டாலின் வாழ்த்து

என்.சங்கரய்யாவுடன் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
என்.சங்கரய்யாவுடன் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

பொதுவாழ்வில் ஈடுபடுவோர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா 99-வது பிறந்தநாளினைக் காண்பது பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாகும். பொதுவுடைமைக் கொள்கையினை வாழ்வின் லட்சியமாக ஏற்றுக்கொண்டு, பதவி சுகங்களை எதிர்பாராமல், எளிய மக்களின் நலனுக்காக வாழ்வை அர்ப்பணித்து, தியாகத் தழும்புகளையே பதக்கங்களாகக் கொண்டவர்.

பொதுவாழ்வில் ஈடுபடுவோர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழும் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா கண்டு, பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்திட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in