

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கும் இடமும், அதற்கு முன்னதாக மருத்துவரைப் பார்ப்பதற்காக காத்திருக்கும் இடமும் மரத்தடியாக உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியபோது, “கரோனா பரிசோதனைக்கு வருவோர் அமர நிழற்கூரையுடன் இருக்கை வசதி செய்து தர வேண்டும். காய்ச்சல் நோயாளிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதாவிடம் கேட்டபோது, “மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடைமுறைகள் நடைபெறும் இடத்தில் போதிய இருக்கை வசதியும், பெரிய தற்காலிக நிழற்கூரையும் ஓரிரு நாட்களில் செய்துதரப்படும். கரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை செய்யத் தேவையில்லை” என்றார்.