Published : 15 Jul 2020 07:14 AM
Last Updated : 15 Jul 2020 07:14 AM

தமிழகத்துக்குள் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் 31-ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தமிழகத்துக்குள் இயக்கப்பட்டு வந்த அனைத்து சிறப்புரயில்களும் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கால் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்துக்குள் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களும் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் இம்மாதம் 15-ம் (இன்று) தேதி வரை ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், தமிழக அரசின்கோரிக்கையை ஏற்று, தமிழகத்துக்குள் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்களான திருச்சி - செங்கல்பட்டு (02605/06) (வழி விருத்தாச்சலம்), மதுரை - விழுப்புரம் (02635/36), கோவை - காட்பாடி (02779/80), திருச்சி - மயிலாடுதுறை (வழி-மயிலாடுதுறை)(06795/96), கோவை - அரக்கோணம் (02675/76), கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி (02083/84), திருச்சி - நாகர்கோவில் இன்டர்சிட்டி (02627/28) ஆகிய ரயில்கள் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும். சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி இடையேயான ராஜ்தானி சிறப்பு ரயில் (02243/44) வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வேவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x