Published : 15 Jul 2020 07:10 AM
Last Updated : 15 Jul 2020 07:10 AM

சென்னை குரோம்பேட்டையில் ரயில்வே சுரங்கப்பாதைக்கு அடிக்கல்; ரூ.217 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலைகள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.217.27 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலைகளை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி, சென்னை குரோம்பேட்டையில் ரயில்வே சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் - திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உத்திரமேரூர், வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட காஞ்சிபுரம் முதல்வந்தவாசி வரை 116 கிமீ மற்றும் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு வரை 58 கிமீ. வரை ரூ.217.27 கோடி யில்மேம்படுத்தப்பட்ட சாலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், பெரம்பலூரில் கட்டப்பட்ட 2 பாலங்கள், புதுக்கோட்டையில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டிடங்கள், நாகை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள், மதுரை குறவன் குளத்தில் கட்டப்பட்டுள்ள பாலம், கன்னியாகுமரி மாவட்டம் பெரும்செல்வவிளை சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இதுதவிர தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள், தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்கள் என மொத்தம் ரூ.248.53 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலங்களை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை ராதாநகரில் ரூ.28.99 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள வாகன சுரங்கப்பாதைக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தலைமைச் செயலர் கே.சண்முகம், நெடுஞ்சாலைத் துறை செயலர் ஆ.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x