

புறநகர் பகுதிகளில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதிய பாக்கி இருப்பதால் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங் களில் சுமார் 3 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஆந்திரா, ஒடிசா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வேலைக்காக வந்துள்ளனர். இந்நிலையில் ஓ.எம்.ஆர். சாலையில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரக் கணக்கான தொழிலாளர் களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பித் சென்று கொண்டிருக்கின்றனர்.
தனியார் கட்டிட நிறுவனத் தில் பணிபுரியும் மேஸ்த்ரி அய்யனார் இதுபற்றி கூறும் போது, “கடந்த டிசம்பர் மாதம் முதல் எங்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. கட்டிட உரிமையாளர் ஒப்பந்ததார ருக்கு பணம் கொடுத்துவிட்டார். ஆனால், ஒப்பந்ததாரர் எங்களுக்கு பணம் தரவில்லை. உணவுக்கு மட்டும் வாரம் ரூ.500 கொடுப்பார்கள். வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ள 1500-க்கும் மேற்பட்டோர் ஊதியம் கிடைக்காததால் திரும்பிச் சென்று கொண் டிருக்கின்றனர்” என்றார்.
அமைப்பு சாரா தொழி லாளர்களின் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் கீதா இதுபற்றி கூறும்போது, “வெளி மாநில தொழிலாளர்கள் சுரண் டப்படுகிறார்கள். ஊதியம் கிடைக்காததால்தான் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வீடு திரும்புகின்றனர். இவ் வாறு வெளி மாநிலங்களிலி ருந்து வரும் தொழிலாளர் களுக்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரப் படுவதில்லை. மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த ஒரு வாரத்தில் சோழவரத்தில் 11 தொழிலாளர்கள் இறந் துள்ளனர். ஆனால் இதுபற்றி அரசு கண்டுகொள்ளவில்லை” என்றார்.
இந்திய கட்டுமான தொழி லாளர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் சிங்கார வேலர் கூறும்போது, “கட்டிடத் தொழிலில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மாநிலங் களுக்கிடையே புலம் பெயரும் தொழிலாளிகள் சட்டம் 1979-ன் படி வெளி மாநில தொழிலா ளர்களாக இருந்தாலும், சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும். வருடத் துக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டாலும் அதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தொழி லாளர் நல அலுவலர் தொழிலா ளரை நேரில் பார்த்து சான்றிதழ் வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களின் சான் றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படு வதில்லை. தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் இருப் பார்கள். இவர்களில் மிக சொற்ப அளவிலேயே தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளனர்” என்றார்.