

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ் சாலையையொட்டி இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன் பகுதியில் இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளன.
நேற்று காலை வாடிக்கையா ளர்கள் பணம் எடுக்க வந்தபோது ஏடிஎம் இயந்திரங்கள் உடைக் கப்பட்டிருந்தன. தங்கச்சிமடம் போலீஸார் விசாரித்தனர். ஏடிஎம்மில் பணம் இருக்கும் பகுதியை உடைக்க முடியாததால் திருடர்கள் அப்படியே விட்டுச் சென்றது தெரியவந்தது. சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.