Published : 14 Jul 2020 06:58 AM
Last Updated : 14 Jul 2020 06:58 AM

சம்ஸ்கிருத ஆச்சாரியர், ஆன்மிக ஆலோசகர் வெங்கட்ராம கனபாடிகள் மறைவு

ஸ்ரீ சங்கர குருகுல வேத பாடசாலாவின் நிறுவனர், அறங்காவலர், ‘வேத பாஷ்ய ரத்னா’ ஸ்ரீ ஆர் வெங்கட்ராம கனபாடிகள் (74), கடந்த 10-ம் தேதி ஹைதராபாத்தில் காலமானார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், யஜூர் வேதத்தில் தனது படிப்பை முடித்து‘கனபாடி’ பட்டம் பெற்று யஜூர்வேதத்தின் பாஷ்யம் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி சாரதாம்பாள் பீடம் இவருக்கு ‘சலக்‌ஷன கனபாடி’ என்ற பட்டம் அளித்தன.

குடியரசுத் தலைவர் விருதுஉள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், திருமலைதிருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தேர்தல் ஆணைய உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

1984-ம் ஆண்டு சங்கரா குருகுல வேத பாடசாலாவைஹைதராபாத்தில் தொடங்கி னார். இந்த பாடசாலா வருடம்தோறும் நூற்றுக்கணக்கான ரிக், யஜூர், சாம வேத வித்யார்த்திகளை உருவாக்கும் ‘வேத பவன்’ என்ற கல்வி நிறுவனமாக வளர்ந்தது. ஹைதராபாத் சங்கராபக்த சபையில் 40 ஆண்டுகாலமாக இருந்து சஹஸ்ரசண்டி,அதிருத்ரம், மஹாருத்ர ஹோமங்களை நடத்தியுள்ளார். மேலும் ஸ்ரீமத் ராமாயண நவாகம், ஸ்ரீமத் பாகவத சப்தாகம், சம்பிரதாய பஜன் உள்ளிட்டவற்றையும் நிகழ்த்தியுள்ளார்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x