கரோனா காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி அளவை குறைக்கக்கூடாது: ஐ.பெரியசாமி

கரோனா காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி அளவை குறைக்கக்கூடாது: ஐ.பெரியசாமி
Updated on
1 min read

கரோனா காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியின் அளவைக் குறைக்ககூடாது. பொதுவிநியோக திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் மார்ச் மாதம் முதல் விநியோகம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும், என திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா காலத்தில் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார். அதன்படி தமிழக அரசு வழக்கமான கொடுத்துவரும் அரிசி அளவுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி மக்களுக்கு வழங்கவேண்டும். ஆனால் தமிழகத்தில் இது முறையாக செயல்பாட்டில் இல்லை.

ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பின்றி வாழ்வாதாரம் இழந்து வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு அத்தியாவசி பொருட்களை அளிக்கவேண்டியது அரசின் கடமை. ஆனால் ஏற்கெனவே வழங்கிவந்த அளவையும் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் குளறுபடிகள் உள்ளன. முன்னுரிமையில்லாத குடும்ப அட்டை பிரிவில் ஏழைத்தொழிலாளர்களும், முன்னுரிமை குடும்ப அட்டையில் வசதி படைத்தவர்களும் இருக்கிறார்கள்.

ஏப்ரல் மாத கூடுதல் அரிசியை மே மாதம் 50சதவீதம், ஜூன் மாதம் 50 சதவீதம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரேஷன் கடைகள் முன்பு பிளக்ஸ் வைத்து விளம்பரப்படுத்தவும் கூட்டுறவு பதிவாளர் ஆணை பிறப்பித்தார்.

ஆனால் இதன் படி செயல்படாமல் கூடுதல் அரிசியை அமைச்சர்கள் தங்கள் சொந்த செலவில் அரிசி வழங்குவது போல் நிவாரணமாக வழங்கி ஆதாயம் தேடுகிறார்கள். முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு வழங்கிவந்த அரிசியின் அளவை குறைத்துள்ளனர். எனவே மக்களுக்கு வழங்கப்படவேண்டிய கூடுதல் அரிசியை முறைப்படி வழங்கவேண்டும்

மத்திய அரசு மக்களுக்கு ஒரு கிலோ துவரம்பருப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் துவரம்பருப்பு மத்திய அரசு வழங்கியது என்றால் ஏற்கனவே மாநில அரசு வழங்கிவந்த துவரம்பருப்பு என்னவானது.

எனவே மார்ச் மாதம் முதல் பொதுவிநியோக திட்டத்தில் நடைபெற்ற விநியோகம் தொடர்பாக அரசு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும், என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in