

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேர் பாதிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் இதன் தாக்கம் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை இரட்டை இலக்கத்தில் இருந்து வந்த கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று இலக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று ஒரே நாளில் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 191 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 10 பேர் கர்ப்பிணிகள். மேலும் விருதுநகர் மாவட்ட தலைமை அஞ்சலகத்தில் அலுவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று காரணமாக தலைமை அஞ்சலகம் மூடப்பட்டது.
இதேபோன்று சாத்தூரில் ஐஓபி வங்கி மேலாளருக்கு கரோனா வைரஸ் தொற்று காரணமாக வங்கிக் களையும் மூடப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,264 ஆக உயர்ந்துள்ளது.