கரோனா பரவுவதை தடுக்க தளர்வில்லா ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு

மதுரையில் முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடிக் காணப்பட்ட கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திப்பு. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரையில் முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடிக் காணப்பட்ட கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திப்பு. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பொது மக்கள் நேற்று வெளியே நடமாடாமலும், வாகனங்களில் செல்லாமலும் தளர்வில்லா முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்புக் கொடுத்து, வீடுகளில் இருந்தனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டி ருந்தன.

ஞாயிற்றுக்கிழமைதோறும் பரபரப்பாக இயங்கும் இறைச்சிக் கடைகள் எதுவும் செயல்படவில்லை. சனிக்கிழமையே மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்திருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் வியாபாரிகள் சிலருக்கு தொற்று உறுதியானதால், வரும் 19-ம் தேதி வரை கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in