காவிரி, வெண்ணாற்றில் இன்று முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறப்பு

காவிரி, வெண்ணாற்றில் இன்று முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறப்பு
Updated on
1 min read

பொதுப்பணித் துறை கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் எஸ்.அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிவரை சென்றுள்ளது.

குறைந்துவிட்ட மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில்கொண்டும், தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும் கல்லணையில் இருந்து ஜூலை 13(இன்று) முதல் சுழற்சி முறையில்(முறைப்பாசனம்) தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் 6 நாட்கள் காவிரியிலும், அடுத்த 6 நாட்கள் வெண்ணாற்றிலும் தண்ணீர் திறக்கப்படும். 2 வாரங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in