தமிழக அரசு புதிதாக நியமித்துள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வரவேற்பு: சமூக நீதியை நிலைநாட்ட கி.வீரமணி வலியுறுத்தல்

தமிழக அரசு புதிதாக நியமித்துள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வரவேற்பு: சமூக நீதியை நிலைநாட்ட கி.வீரமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழக அரசு புதிதாக நியமித் துள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்துக்கு ஒன்றரை ஆண்டு களுக்கு பிறகு, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். ஆணையத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி தணிகாசலம், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பிச்சாண்டி, ராமநாதன், சந்திர சேகரன் மற்றும் அழகுமலை, சிவக்குமார், அழகிரிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற்படுத்தப்பட்ட நலத் துறை இயக்குநரும் உறுப் பினராக இருப்பார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத் துறை இயக்குநர் உறுப்பினர் செயலராக செயல் படுவார். இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, புதிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “18 மாதங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் இருந்த தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு, ஆணைய தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் சட்டப்படி பெறவேண்டிய பங்கு குறித்து பெரும் சட்டப் போராட்டம் நடை பெறும் நிலையில், பிற்படுத்தப் பட்டோர் நல ஆணைய தலை வரும், உறுப்பினர்களும் கமிஷன் சார்பில் தமது உரிய பங்களிப்பை அவசரமாக அளித்து சமூகநீதியை நிலை நாட்ட முன்வரவேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in