வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளிப்பு

வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளிப்பு
Updated on
1 min read

தளர்வு இல்லா முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், ஆம்பூர் அடுத்த புதுமனை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலன்(27) தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே புறவழிச்சாலை வழியாக வந்தார்.

அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் முகிலன் ஓட்டிவந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால், மனமுடைந்த முகிலன் மண்ணெண்ணெய்யை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த முகிலன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி காமனி, திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார், ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் ஆகியோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, ஆம்பூர் நகர காவல் நிலையம் முன்பாக முகிலனின் உறவினர்கள் திரண்டனர். அவர்களை, எஸ்பி விஜயகுமார் சமாதானம் செய்து, விசாரித்து உரியநடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in