Published : 13 Jul 2020 06:54 AM
Last Updated : 13 Jul 2020 06:54 AM

தமிழகத்தில் 16 லட்சத்தை கடந்த கரோனா பரிசோதனை

தமிழகத்தில் கரோனா பரி சோதனை எண்ணிக்கை 16 லட் சத்தை கடந்துள்ளது. நேற்று புதிதாக 4,244 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று 2,543 ஆண்கள், 1,700 பெண்கள் மற்றும் மூன் றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 4,244 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதில் 4,210 பேர் ஏற் கெனவே பாதிக்கப்பட்டவர்களு டன் தொடர்பில் இருந்தவர்கள். இவைதவிர வெளிநாடுகள் மற் றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 34 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,168 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 385 பேருக்கும் மதுரையில் 319 பேருக்கும் செங்கல்பட்டில் 245 பேருக்கும் திருவள்ளூரில் 232 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38,470 ஆக அதிகரித்துள் ளது. அரசு மருத்துவமனைகளில் இளைஞர்கள் உட்பட 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 பேர் என நேற்று 68 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 32 பேர் இறந்துள்ளனர்.

இதில் 60 பேர் ஏற்கெனவே சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டி ருந்தனர். 8 பேர் இறப்புக்கு கரோனா பாதிப்பு மட்டுமே காரணமாக உள் ளது. இதன்மூலம் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட் களில் மட்டும் 645 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 77,338 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 105 ஆய்வகங்களில் இதுவரை 16 லட்சத்து 9,448 பரி சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x