Published : 13 Jul 2020 06:51 AM
Last Updated : 13 Jul 2020 06:51 AM

நிலத் தகராறில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம்; திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ கைது: கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு- 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்

நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில், தனது துப்பாக்கியால் சுட்ட திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மனை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகளும் தோட்டாங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் திருப் போரூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக திமுகவைச் சேர்ந்த இதயவர்மன் உள்ளார். இவரது தந்தை லட்சுமிபதி, திமுகவின் முன்னாள் ஒன்றியக் குழு தலை வர். இவர்கள் குடும்பத்துடன் திருப் போரூர் அருகே செங்காடு கிரா மத்தில் வசித்து வருகின்றனர்.

இதே பகுதியைச் சேர்ந்தவர் குமார். செங்காடு கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலுக்கு சொந்த மான நிலத்தின் அருகே குமார் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு பாதை அமைப்பதற்காக குமார் தரப்பினர் நேற்று முன்தினம் முயன்றனர்.

இதற்கு எம்எல்ஏ இதயவர்மன், அவரது தந்தை லட்சுமிபதி இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்எல்ஏ தரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் அந்த இடத்துக்கு சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. அரிவாள், கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

இதில் எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி, அவரது தம்பி குருநாதன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதைத் தொடர்ந்து இதயவர்மன் எம்எல்ஏ தனது பாதுகாப்புக்காக வைத்தி ருந்த கைத்துப்பாக்கியை எடுத்து குமார் மற்றும் அவரது ஆதரவாளர் களை நோக்கி சுட்டார். இதில், 2 குண்டுகள் காரில் பட்டன. ஒரு குண்டு அந்த வழியாக சென்ற சீனி வாசன் என்ற கீரை வியாபாரியின் கையில் பட்டது. இதில் அவர் காயம் அடைந்தார். இதயவர்மன் துப்பாக்கியால் சுடுவதை பார்த் ததும் குமாரும் அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து சிதறி ஓடினர். அவர்கள் வந்திருந்த இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், பொக்லைன் போன்றவற்றை அங் கேயே விட்டுவிட்டு சென்றுவிட்ட னர். அதைத் தொடர்ந்து எம்எல்ஏ வின் ஆதரவாளர்கள், அந்த இரு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து அறிந் ததும் மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தர வதனம் தலைமையிலான போலீ ஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த சீனிவாசனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மோதலில் காயமடைந்த எம்எல்ஏ வின் தந்தை லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். குமார் தரப்பில் காய மடைந்த நபர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித் தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இரு தரப்பினருக்கும் ஏற் கெனவே முன்விரோதம் இருந் துள்ளது. எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை லட்சுமிபதியும் ஒரு துப்பாக்கியால் சுட்டுள்ளார். குமார் மற்றும் துப்பாக்கி குண்டால் காய மடைந்த சீனிவாசன் ஆகியோர் அளித்த புகாரின்பேரில் எம்எல்ஏ இதயவர்மன், அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இரு துப்பாக்கிகளும் உரிமம் பெற்றே வாங்கப்பட்டுள் ளன. அந்த உரிமங்கள் காலாவதி யாகிவிட்டன. அதைப் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர்.

எம்எல்ஏ இதயவர்மன், அவரது ஆதரவாளர்கள் மீது கொலை முயற்சி, 5 நபர்களுக்கு மேற்பட் டோர் ஒன்றாக கூடி கலவரம் ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல், கையால் அடித்து காயத்தை ஏற் படுத்துதல், ஆயுதத்தை தவறாக பயன்படுத்துதல் உட்பட 6 பிரிவு களின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதேபோல, எம்எல்ஏ வின் தந்தை லட்சுமிபதி அளித்த புகாரின்பேரில் குமார் தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

துப்பாக்கி குண்டால் காய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சீனிவாசன், திடீரென காணாமல் போயுள்ளார். எம்எல்ஏவின் ஆட்கள் அவரை எங் கேனும் மறைத்து வைத்திருக்கலாம் என கருதுகிறோம். அதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், மேடவாக்கம் அருகே உறவினர் வீட்டில் இருந்த எம்எல்ஏ இதயவர்மனை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய் தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை செங் கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப் பட்டது. அதைத் தொடர்ந்து அவரை செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி காயத்ரிதேவி முன்பு ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, இந்த மோதல் குறித்து செங்காடு கிராம மக்கள் தரப்பில் போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி சிலர் கூறும்போது ‘‘எம்எல்ஏ மீது மட்டும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதே நேரத் தில் கோயில் நிலத்தை ஆக்கிர மித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலி யுறுத்தி, கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்க உள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x