Published : 12 Jul 2020 07:45 AM
Last Updated : 12 Jul 2020 07:45 AM

சென்னை சுற்றுப்புற 3 மாவட்டங்களில் 707 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு- திருவள்ளூரில் ஒரேநாளில் 346 பேர் பாதிப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய சென்னை சுற்றுப்புற மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 707 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டங்களில் தீவிர தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏற்கெனவே 3,096 ஆக இருந்தது. நேற்று மேலும் 120 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே இங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,216 ஆகஉயர்ந்தது; 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருந்தொற்று பாதிப்பு ஏற்கெனவே 7,631 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று மேலும் 241 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7,872 ஆக உயர்ந்தது. இவர்களில் 154 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 346 பேருக்கு பெருந்தொற்றுஉறுதியானதால் இம்மாவட்ட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,421 ஆக அதிகரித்துள்ளது. 3 பேர்நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

சித்த மருத்துவ சிகிச்சை

வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 134 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்ட மொத்த பாதிப்பு 2,776 ஆக அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் தனியாக சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஏற்கெனவே 2,860 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று மேலும் 64 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,924 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x