Published : 12 Jul 2020 07:41 AM
Last Updated : 12 Jul 2020 07:41 AM

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்படும்: சுகாதாரத் துறை செயலர் தகவல்

சென்னை மாநகராட்சி அம்பத்தூர்மண்டலத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை நேற்று பார்வையிட்ட பின்பு சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, லேசான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாமல் இருப்போருக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் 17 ஆயிரத்து 500படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான படுக்கைகள் காலியாக உள்ளன.

தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கரோனா சிகிச்சைக்கு தேவையான போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையங்களைஅதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டங்கள்தோறும் சித்தமருத்துவ சிகிச்சை மையங்களைஅதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x