

மதுரையில் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில், அம்மா கிச்சன் மூலம் கோவிட் கேர் சென்டர்களில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோருக்கும், மருத்துவர்கள், பணியாளர்கள், காவல் துறை யினருக்கும் 3 வேளையும் உணவு, தேநீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், உணவு தயாரிக்கும் அம்மா கிச்சன் கூடத்தை அமைச்சர் ஆர்.பி. உதய குமார் நேற்று அதிகாலை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ரூ. 2.50 லட்சம் மதிப் பிலான 500 தெர்மல் ஸ்கேனர்கள், 100 பல்ஸ் ஆக்ஸி மீட்டர்களை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜெகதீசன் அமைச்சரிடம் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கூறியது: மதுரையில் கோவிட் கேர் சென்டர் கள் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப் படும். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இதுவரை கரோனா குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளி யிட்டுள்ளார். ஒன்று கூட மக்கள் நலன் சார்ந்தது இல்லை. பொறுப் புள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூற வேண்டும் என்றார்.