

திருச்சி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 109 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 21 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 5 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 41 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கும், கரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் தலா 4 பேருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது.
மேலும், கரூரில் நேற்று உயிரிழந்த 41 வயது நபருக்கும், காரைக்காலில் கடந்த 7-ம் தேதி உயிரிழந்த 75 வயது மூதாட்டிக்கும், திருச்சியில் நேற்று முன்தினம் உயிரிழந்த அரியலூரைச் சேர்ந்த 45 வயது நபருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் 72 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது.