

இந்திய - இலங்கை மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் இடையி லான பிரச்சினை தொடர்பாக விரைவில் மோடியை சந்திக்க உள்ளோம் என்று தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ தெரிவித்தார்.
புதுச்சேரியிலுள்ள தேசிய மீனவர் பேரவைத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
இந்தியாவில் மீனவர் நலனில் இதுவரை ஆண்ட எந்த மத்திய அரசும் அக்கறை கொள்ளவில்லை. இந்திய-இலங்கை மீனவர் பேச்சு வார்த்தையில் சுருக்குவலை, இரட்டை மடி வலை பயன்படுத்தப் போவதில்லை என தெரிவித்துள் ளோம். அவ்வாறு மீறி பயன்படுத்தி னால் மீனவ பஞ்சாயத்தாரே நட வடிக்கை எடுப்பார்கள். அதே நேரத்தில் 40 ஆண்டுகளாக விசைப் படகுகளில் இழுவை வலை பயன்படுத்தி வருகிறோம். அதை படிப்படியாக குறைக்கவும், மாற்று வழி ஏற்பாடு செய்ய மத்திய அரசு உதவ வேண்டும்.
ஆண்டுக்கு 90 நாட்களுக்கு மீன்பிடிப்பது தொடர்பாக இந்திய-இலங்கை மீனவர் தரப்பில் உடன் பாடு ஏற்பட்டது. இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளும் ஏற்ற நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை மற்றும் சட்டத்துறையினர் இம் முறையை ஏற்கவில்லை. தற் போது இலங்கை மீனவ பிரதிநிதி களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் பேசி முடிவு எடுத்த பிறகு இரு நாட்டு அரசு பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோ சிக்க முடிவு எடுத்துள்ளோம்.
இருநாட்டு மீனவர் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் தொடங் கும். இது இரு கட்டமாக நடக் கும். 3-வது கட்டத்தில் அரசு பிரதிநிதி களுடன் நடக்கும். இந்திய-இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பாக மோடியை விரைவில் சந்திக்க உள்ளோம்.
வேளாண் அமைச்சகத்தை பிரித்து மத்திய அரசில் மீன் வளம் மற் றும் மீனவர் நல அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று வலியு றுத்துவோம் என்று குறிப்பிட்டார்.